Tuesday, July 29, 2025

“டிரம்ப் கெஞ்சியதால் போர் நிறுத்தம்” – ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு

கடந்த 13ஆம் தேதி முதல், ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டதாகக் கூறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது. பின்னர், அமெரிக்கா ஈரானில் உள்ள அணு உலைகளை தாக்கியது. இதற்கு எதிராக ஈரான், அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு நாடுகளும் முழுமையான போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டதாக அறிவித்தார். ஆரம்பத்தில் ஈரான் இந்த தகவலை மறுத்திருந்தாலும், தற்போது அரசு ஊடகம் போர் நிறுத்தம் உறுதி செய்துள்ளது.

அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், “அமெரிக்க அதிபர் டிரம்ப் கெஞ்சியதால் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொண்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News