Saturday, August 2, 2025
HTML tutorial

‘BCCI’ வெளியிட்ட ஒப்பந்த பட்டியல் ! list இல் இல்லாத ‘அஸ்வின்’!

இந்தியா முழுக்க எதிர்பார்த்த ஒரு முக்கியமான அறிவிப்பை BCCI தற்போது வெளியிட்டிருக்கிறது. அது தான் – 2024-25 ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியல். இந்திய அணிக்காக விளையாடும் முக்கியமான வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் BCCI ஒப்பந்தம் கொடுக்கும். அந்த ஒப்பந்தங்கள் நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டிருக்கும் – A+, A, B, C. இந்த வகைகளுக்கேற்ப, ஒவ்வொரு வீரருக்கும் சம்பளத் தொகையும் வேறுபடும்.

முதலில், A+ கிரேடு… இதில்,இந்திய அணியில் மிக முக்கியமான, ஒவ்வொரு போட்டியிலும் தொடர்ச்சியாக ஆடும் வீரர்கள் இதில் இடம்பெறுகிறார்கள். இந்த ஆண்டும், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா – இந்த நான்கு பேரும் A+ பட்டியலில் தொடர்கிறார்கள். இவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் வருடத்திற்கு 7 கோடி ரூபாய் சம்பளமாகக் கிடைக்கும்.

அடுத்து, A கிரேடு. இந்த பட்டியலில் இருக்கின்ற வீரர்கள் – முகமது சிராஜ், கேஎல் ராகுல், சுப்மான் கில், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி மற்றும் ரிஷப் பண்ட். கடந்த ஆண்டில் B கிரேடில் இருந்த ரிஷப் பண்ட், இப்போது A கிரேடுக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார். அதேபோல், கடந்த வருடம் A கிரேடில் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ஓய்வு பெற்றதால் பட்டியலில் இடம் பெறவில்லை. இந்த A கிரேடு வீரர்களுக்கு வருடத்திற்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

இப்போ B கிரேடை பார்ப்போம்:

இந்த பட்டியலில் – அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், சர்ஃபராஸ் கான் மற்றும் ரஜத் பட்டிதார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். B கிரேடு வீரர்களுக்கு வருடத்திற்கு 3 கோடி ரூபாய் சம்பளமாக பிசிசிஐ வழங்குகிறது. இந்த பட்டியலில் புது முகங்கள் இருப்பது ரசிகர்களுக்கே ஒரு சந்தோஷம்.

அதற்க்குப்பிறகு, C கிரேடு. இதில் – ஷிவம் துபே, ஜித்தேஷ் சர்மா, ராகுல் திரிபாதி, ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக் உள்ளிட்டோர் உள்ளனர். C கிரேடு வீரர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 1 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பட்டியலை பார்த்தாலே தெரிகிறது – BCCI இளையதலைமுறையை நன்கு ஊக்குவிக்கிறது. யார் கடுமையாக விளையாடுகிறார்களோ, அவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்குது, பெரிய வாய்ப்புகளும் கிடைக்கும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News