Wednesday, April 30, 2025

சுமார் 90 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன.

இந்தியாவில் கடைசியாக 1931ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர், 2011ம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் சாதி விவரமும் சேர்க்கப்பட்டது. ஆனால், அதன் தரவுகள் வெளியிடப்படவில்லை.

2021ல் நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கொரோனாவல் தள்ளிப்போன நிலையில், தற்போது மீண்டும் நடைபெற உள்ளது.

Latest news