மும்பையில் ஓடும் காரில் ஏறி நின்று Aura Farming நடனமாடிய பெண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ரய்யான் அர்கான் திகா, ஒரு உள்ளூர் திருவிழாவில் நீண்ட, அதிவேக படகின் முன் நின்று ஆடிய நடனம் சர்வதேச அளவில் வைரலாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, இந்தோனேசிய சிறுவனை போன்றே நடனமாடி அதனை ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நவி மும்பையில் ஓடும் கார் மீது ஏறி பெண் ஒருவர் Aura Farming நடனமாடிய வீடியோ வைரலான நிலையில், அப்பெண் மற்றும் கார் ஓட்டிய அவரது காதலன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.