Thursday, February 6, 2025

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது வழக்குபதிவு

இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில், இரு அமைப்பினரிடையே வன்முறையை தூண்டும் விதமாக அவர் பேசியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி வந்த மதுரை சுப்பிரமணியபுரம் போலீசார், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியது உட்பட 4 பிரிவுகளின் கீழ் ஹெச்.ராஜா மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

Latest news