Monday, December 29, 2025

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் உள்ளிட்ட 18 பேர் மீது வழக்கு பதிவு

கர்நாடகா மாநிலம் சதாசிவா நகர் காவல் நிலையத்தில் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் மையத்தின் முன்னாள் தலைவர் பலராம், உள்ளிட்ட 18 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போவி பழங்குடியினத்தைச் சேர்ந்த துர்க்ப்பா என்பவர் அளித்த புகாரில், “நான் இந்திய அறிவியல் மையத்தின் நீடித்த தொழில் நுட்பப் பிரிவில் பணி புரிந்தேன். கடந்த 2014ம் ஆண்டு நான் பணியில் இருந்தபோது போலியான பாலியல் வழக்கில் சிக்கவைக்கப் பட்டு பணி நீக்கம் செய்யப் பட்டேன். அப்போது சாதிய ரீதியிலான அவதூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் கர்நாடகா மாநிலம் சதாசிவா நகர் காவல் நிலையத்தில் இந்தப் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related News

Latest News