Tuesday, January 27, 2026

‘தக் லைஃப்’ படத்தின் மீதான தடையை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு

மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக கூறினார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கர்நாடகத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. ஆனால் கமல்ஹாசன் தான் தவறாக எதுவும் கூறவில்லை என்றும், அன்பு மன்னிப்பு கேட்காது என்றும் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் மே 30-ம் தேதிக்குள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவில்லை எனில், அவரது தக் லைப் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்படும் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை எச்சரித்தது. இந்நிலையில் ‘தக் லைஃப்’ படத்தின் மீதான தடையை நீக்கக் கோரி கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் கமல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Related News

Latest News