அனைத்து விமான நிறுவனங்களுக்கும் இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், விமானங்களில் பயணிகள் சாட்டிலைட் போன் எடுத்து வரக்கூடாது என விமான நிறுவனங்கள் அறிவிக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் விமானங்களில் சாட்டிலைட் போனுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அமெரிக்கர் ஒருவர் சாட்டிலைட் போன் கொண்டு வந்ததால் டேராடூனில் கைது செய்யப்பட்டார். இதேபோல், மற்றொரு பயணி சென்னை விமான நிலையத்தில் சாட்டிலைட் போனுடன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.