அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கீழ் கால்களில் வீக்கம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தகவல்களின்படி டொனால்ட் டிரம்புக்கு பொதுவான நரம்பு கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவித்தது. இது 70 வயதுக்கு மேற்பட்ட நபர்களிடையே அடிக்கடி காணப்படும் ஒரு நிலை ஆகும்.
பொதுவாக கால்களில் தான் இந்த பாதிப்பு ஏற்படும். சமீபத்தில் டொனால்ட் டிரம்ப்பின் கணுக்காலில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் தான் Chronic Venous Insufficiency பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இது உயிருக்கு ஆபத்தான பாதிப்பு இல்லை என்றாலும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டியது அவசியமாகும்.
ஒட்டுமொத்தமாக, அதிபர் டிரம்பின் உடல்நலத்தைச் சுற்றியுள்ள பல ஊகங்களை அமைதிப்படுத்த வெள்ளை மாளிகை முயன்றது. மேலும் அவரது ஒட்டுமொத்த உடல்நிலை அவரது வயதுக்கு ஏற்றவாறு நன்றாக உள்ளது என்றும் கூறியுள்ளது.