கார் ரேஸிங்., இதை நான் எனக்காக பண்ணல : நடிகர் அஜித்குமார் பேட்டி

கடந்த 2025ம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என 2 திரைப்படங்கள் வெளியாகின. இந்த 2026ம் ஜனவரியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு, அவரின் மங்காத்தா திரைப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து அஜித் குமாரின் 64வது படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவிருக்கிறார். விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்தநிலையில் கார் ரேஸிங் மற்றும் தன்னுடைய ரசிகர்கள் குறித்து அஜித் சமீபத்திய பேட்டியில் மனந்திறந்து பேசியிருக்கிறார். ரசிகர்களின் ஆதரவு குறித்து அஜித், ”இது எனக்கு மிகவும் முக்கியமானது. அதாவது, பெரும்பாலான நேரங்களில் ஒருவர் தனது சவுகரியத்தை விட்டு வெளியே வரும்போது, அவர் அப்படிச் செய்யலாமா? செய்யக்கூடாதா? என்பது போன்ற பல விமர்சனங்களும் விவாதங்களும் எழுகின்றன. சொல்லப்போனால் நானும் அதை எதிர்கொள்கிறேன்.

மலேசியா, துபாய் மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவுக்கு நன்றி. சர்கியூட் ஆஃப் ஸ்பாவில் என்னை ஆதரிக்க சுமார் 9000 ரசிகர்களும், நர்பர்கிங்கில் 6000 ரசிகர்களும் வந்திருந்தனர். நான் சரியான பாதையில் செல்கிறேன் என்பதை இது எனக்கு உறுதிப்படுத்துகிறது. உண்மையாக சொல்லப்போனால், நான் இதை எனக்காகச் செய்யவில்லை. எனக்கு இந்த விளையாட்டு மீது அளவு கடந்த காதல் உண்டு. என்னால் முடிந்தவரை நீண்ட காலத்திற்கு ஒரு பந்தய ஓட்டுநராக இருக்க நான் நிச்சயமாக விரும்புகிறேன்,” இவ்வாறு வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

Related News

Latest News