Thursday, March 13, 2025

பூந்தமல்லி அருகே கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த கார்

பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் செல்லும் சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற அப்படியே கவிழ்ந்தது. இதனை கண்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து காரில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். இதில் காரில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பினார்கள். இது குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பள்ளத்தில் கவிழ்ந்த காரை மீட்டனர். அதிவேகமாக காரை இயக்கியதே விபத்திற்கு காரணம் என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Latest news