சிங்கப்பூரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் விழுந்த நிலையில், அதில் இருந்த பெண் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தஞ்சோங் காத்தோங் சாலைக்கும், மவுண்ட்பேட்டன் சாலைக்கும் இடைப்பட்ட சந்திப்பில் திடீரென பள்ளம் உருவானது. அப்போது அவ்வழியாக சென்ற கார் பள்ளத்தில் சிக்கிய நிலையில், அதிலிருந்த பெண் உயிருக்கு போராடினார். இதனையடுத்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர், காரையும் வெளியே எடுத்து பெண்ணை காப்பற்றினர்.