வண்டலூர் அருகே, சிக்னலில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார்.
சென்னை வண்டலூர் அடுத்த கூடுவாஞ்சேரி சிக்னலில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்புறம் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டுனர் நிகில் பாபு என்பவர் பலத்த காயமடைந்தார்.
விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்த போக்குவரத்து போலீசார் பொதுமக்கள் உதவியுடன், நிகில்பாபுவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வாகனங்களை அப்புறப்படுத்திய போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
