சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நாளை அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடை பெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, பல்வேறு மாநில ஆளுநர்கள், மதுரை ஆதீனம் உள்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்நிலையில் மதுரையில் இருந்து மதுரை ஆதீனம் இன்று காரில் சென்னை புறப்பட்டார். உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது மதுரை ஆதீனம் பயணித்த கார் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் காரில் பயணித்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.