Wednesday, April 2, 2025

‘ஆசையாக’ Selfie கேட்ட ஊழியர்கள் மொபைல் போனை ‘தூக்கி எறிந்த’ கேப்டன்

ஆசையாக செல்பி கேட்ட ஊழியர்களின் மொபைல் போனை, ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் தூக்கி எறிந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயத்தால் அவதிப்பட்டு வருவதால், முதல் 3 போட்டிகளுக்கு அந்த அணியின் இளம்வீரர் ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டார். அவரின் தலைமையில் கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக ராஜஸ்தான் தோல்வியைத் தழுவியது.

மார்ச் 30ம் தேதி கவுகாத்தியில் நடைபெற்ற, சென்னைக்கு எதிரான போட்டியில் 6 ரன் வித்தியாசத்தில் RR வென்றது. நிதிஷ் ராணா CSK பவுலர்களை வெளுத்தெடுத்து விட்டார். 36 பந்துகளில் ராணா எடுத்த 81 ரன்கள், ஹாட்ரிக் தோல்வியில் இருந்து அணியைக் காப்பாற்றி விட்டது.

இந்தநிலையில் ரியான் பராக் மைதான ஊழியர்களிடம் நடந்து கொண்ட விதம், ரசிகர்களை வெகுவாக அதிர வைத்துள்ளது. வீடியோவில் ஊழியர்கள் அனைவரும் நிற்க, மொபைலை கையில் வைத்திருக்கும் ரியான் தனக்கு பின்னால் இருக்கும் நபரை முறைத்து பார்க்கிறார்.

அந்த ஊழியர் வேகமாக சென்று மற்றவர்களுடன் நிற்க, செல்பியை எடுத்த ரியான் மிகவும் அலட்சியமாக மொபைல்போனை தூக்கி வீசிவிட்டு செல்கிறார். முன்னணி வீரர்கள் கூட ரசிகர்களிடம் கனிவும், கருணையுமாக நடந்து கொள்கின்றனர்.

ஆனால் இந்திய அணியில் இன்னும் ஒரு நிலையான இடத்தைப் பிடித்திராத ரியான், மைதான ஊழியர்களிடம் மோசமாக நடந்து கொண்டிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள், ” இந்த வீடியோ கண்டிப்பா வாழ்க்கை பாடத்தை உங்களுக்கு கற்றுக் கொடுக்கும்,” என்று அவரை வசைபாடி வருகின்றனர்.

Latest news