ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 203 ரன்கள் எடுத்தது.
204 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த மும்பை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. 12 ரன் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்றிருந்தாலும் மெதுவாக பந்து வீசியதாக லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ. 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.