தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே திரைப்படங்களை ரி-ரிலீஸ் செய்யப்படுகிறது. திரைப்பிரலங்களின் படம் மற்றும் பிரபலமான திரைப்படங்கள் சில ஆண்டுகள் கழித்து ரி-ரிலீஸ் செய்யப்படும் திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் ரி-ரிலீஸ் வெளியீடு செய்யப்பட்டு இருக்கிறது.
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் படங்களால் தனி இடம் பிடித்தவர் கேப்டன் விஜயகாந்த். பொதுவாக முன்னணி நடிகர்களுக்கு நூறாவது திரைப்படம் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. ஆனால் கேப்டன் விஜயகாந்தின் நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் பல எதிர்பார்ப்புகளுடன் வெளியானது.
இந்த திரைப்படத்தினை ஆர்.கே.செல்வமணி இயக்கி இருந்தார். வில்லனாக மன்சூர் அலிகான் அறிமுகம் செய்யப்பட்டார். சரத்குமார், ரம்யாகிருஷ்ணன், ரூபினி என பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். 1991ம் ஆண்டு வெளியான போதே இப்படம் 250 நாட்களுக்கு அதிகமாக ஓடி சாதனை செய்தது.
இந்த நிலையில் 22ந் தேதி ரி ரிலீஸ் செய்யப்பட்ட இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாள் வசூல் 42 லட்சத்தை பெற்றது. இரண்டாம் நாள் வசூல் 86 லட்சம் பெற்றது. ஆனால், மூன்றாம் நாள் 1.3 கோடியாக உயர்ந்தது.
அதை தொடர்ந்து ,தற்போது 7ம் நாளில் 2.8 கோடி வரை வசூல் குவித்துள்ளது. இதுவரை கேப்டன் பிரபாகரன் முதல் வாரத்தில் 12.04 கோடி ரூபாய் வரை வசூலித்து இருக்கிறது. மேலும், இரண்டாம் வாரமும் இந்த திரைப்படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே ரி-ரிலீஸ் திரைப்படங்கள் நல்ல வசூல் குவிப்பது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.