இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியபோது தேசிய கீதத்தை முதலில் பாட வில்லை என்று குற்றம்சாட்டி ஆளுநர் ஆர்.என் ரவி சட்டசபையில் இருந்து வெளியேறினார்.
இதையடுத்து தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.