Tuesday, December 30, 2025

ரத்து செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் எழும்பூர் வரை இயக்கம்

தாம்பரத்திலிருந்து இயக்கப்பட்ட சில ரயில்கள் இப்போது எழும்பூருக்கு மீண்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் – திருச்சிராப்பள்ளி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.12653/12654) முன்னதாக தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்பட்ட நிலையில் தற்போது எழும்பூர் வரை செப்டம்பர் 17, 2025 முதல் இயக்கப்படும்.

மதுரை – சென்னை எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.12638 / 12637 ) முன்னதாக தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்பட்ட நிலையில் தற்போது எழும்பூர் வரை செப்டம்பர் 17, 2025 முதல் வழக்கம் போல் சென்னை எழும்பூரிலிருந்து இயக்கப்படும்.

சென்னை எழும்பூர் – திருச்சிராப்பள்ளி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.22675 / 22676) செப்டம்பர் 18, 2025 முதல் வழக்கம் போல் சென்னை எழும்பூரில் நிறுத்தப்படும்.

Related News

Latest News