உலகின் மிகப்பெரிய செல்வந்தரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான மஸ்க் தனது சமூக வலைத்தளப் பக்கமான X தளத்தில், “நெட்ஃபிளிக்ஸை ரத்து செய்யுங்கள்” மற்றும் “உங்கள் குழந்தைகளின் நலனுக்காக நெட்ஃபிளிக்ஸை ரத்து செய்யுங்கள்” என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரது ட்வீட்டை தொடர்ந்து ஏகப்பட்ட பேர் நெட்பிளிக்ஸை ரத்து செய்துவிட்டோம் என ஸ்க்ரீன் ஷாட் போட்டு வருகின்றனர்.
சார்லி கிர்க் என்பவரின் கொலையை கொண்டாடிய ஒருவரை நெட்ஃபிளிக்ஸ் பணியில் அமர்த்தியதால் தனது சந்தாவை ரத்து செய்ததாக அந்த பயனர் குறிப்பிட்டிருந்தார். இதுவே மஸ்கின் சமீபத்திய கருத்துக்களுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இது தவிர நெட்ஃபிளிக்ஸ் குழந்தைகள் நிகழ்ச்சிகளும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. டிரான்ஸ்ஃபார்மர்ஸ்: எர்த்ஸ்பார்க் மற்றும் ஜுராசிக் வேர்ல்ட்: கேம்ப் கிரெட்டேசியஸ் ஆகியவை பாலின அடையாள கருப்பொருள்களை விளம்பரப்படுத்தியதற்காக சில பார்வையாளர்களால் விமர்சிக்கப்பட்டன. இதில் பிந்தைய நிகழ்ச்சியில் இரண்டு பெண் கதாபாத்திரங்கள் முத்தமிடும் காட்சியும் அடங்கும்.