உங்க ரயில் டிக்கெட்டை இன்னொருத்தருக்கு மாத்தி விடனுமா? REFUND பெறும் வழிமுறைகள்.

170
Advertisement

நீண்ட பயணங்களுக்கு ரயில்களில் முன்பதிவு செய்து செல்வது பெரும்பாலானோரின் வாடிக்கை.

ஆனால், சில நேரங்களில் முன்பதிவு செய்தாலும் போக முடியாத சூழல் ஏற்படலாம். அப்போது சுலபமாக எப்படி இன்னொருவருக்கு டிக்கட்டை மாற்றுவது மற்றும் REFUND பெறுவது எப்படி என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

ரயில் டிக்கெட்டை குடும்ப உறுப்பினருக்கு மாற்ற முடியும். ரயில் புறப்படுவதற்கு 24 மணிநேரத்திற்கு முன் மாற்ற விரும்பும் நபரின் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் டிக்கெட் பிரிண்ட் ஆகியவற்றை எடுத்து சென்று ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு கவுண்டரில் டிக்கெட்டை மாற்ற விண்ணப்பிக்க வேண்டும்.

முன்பதிவு செய்த பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை, அதற்கு REFUND பெற வேண்டும் என்றால் Ticket Deposit Receipt எனப்படும் TDR படிவத்தை டிக்கெட் எடுத்துள்ள ரயில் கிளம்பிய ஒரு மணி நேரத்திற்கு பின் பூர்த்தி செய்ய வேண்டும். Offline மற்றும் ஆன்லைன் முறையில் இதற்காக விண்ணப்பிக்கலாம். Offline முறையில் படிவத்தை GGM (IT), Indian Railway Catering and Tourism Corporation Limited, 1st Floor, Internet Ticket Centre, IRCA Building, State Entry Road, New Delhi 110055 என்ற விலாசத்துக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் முறையில் பதிவு செய்தால் உங்கள் IRCTC கணக்கில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் வரலாற்றில் TDR தாக்கல் செய்யப்பட வேண்டிய PNR-ஐ தேர்ந்தெடுத்து, அதன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விவரங்கள் அனைத்தும் சரியாக இருந்தால் பரிசீலனைக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கிற்கு பணம் வந்துவிடும். எனினும், பணம் திரும்ப கிடைக்க 60 நாட்கள் வரை ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.