சிறுநீரில் செல்போன் சார்ஜ் ஏற்றலாம்

356
Advertisement

உலகில் முதன்முறையாக மனித சிறுநீரையும் கழிவுகளையும் பயன்படுத்தி செல்போன் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளும் முறையை இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் ரோபோட்டிக்ஸ் ஆய்வகம் கண்டுபிடித்துள்ளது.

உகாண்டா, கென்யா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள பள்ளிக் கழிப்பறைகளில் இந்த முறையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.
Dr Ioannis Ieropoulos என்ற முனைவர் பட்ட ஆய்வு மாணவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

சிறுநீரில் காணப்படும் கரிமப் பொருட்களை எரிபொருளாகப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படும் வகையில் இதற்கான தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக உருவாக்கியுள்ள கருவியை இல்லங்களிலும் நிறுவிப் பயன்படுத்த முடியும் என்கிறார் அந்த சாதனை விஞ்ஞானி.

Advertisement

சிறுநீரைப் பயன்படுத்தி பவர் ஷவர், லைட்டிங், ரேஸர், மொபைல் போன்களுக்குப் போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு இந்தத் தொழில்நுட்பம் பயன்படும் என்றும், வீட்டுக் குளியறைகளில் இதனை நிறுவிக்கொள்ளலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நாள் முழுவதும் மனிதர்களோடு ஒட்டி உறவாடுவது ஆடை மட்டுமல்ல, செல்போனும்தான் என்கிற நிலை உலகம் முழுவதும் வந்துவிட்டது. இத்தகைய நிலையில், மின்தட்டுப்பாடு உள்ள பகுதியில் வசிப்போர் செல்போனுக்கு சார்ஜ் ஏற்றமுடியாமல் தவித்துவிடுகின்றனர். அத்தகையோருக்கு இந்தக் கண்டுபிடிப்பு பெரிதும் உபயோகமாக இருக்கும்.