காலை உணவில் மாம்பழத்தை சேர்த்தால் இத்தனை அற்புதங்கள் நடக்குமா? இது தெரியாம இருந்துட்டோமே! 

191
Advertisement

மாம்பழத்தைச் சாப்பிடுவதால் பல விதமான ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்குக் கிடைக்கிறது, இதன் சத்துக்களுக்காகவே நாம் உணவோடு மாம்பழத்தையும் சேர்த்து சாப்பிடுகிறோம், ஆனால் அப்படிச் சாப்பிடுவது நல்லதா?

மாம்பழத்தை நாம் காலை உணவிலும் சேர்த்து கொள்ளலாமா? போன்ற பல கேள்விகளுக்கு உண்டான பதிலைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

மாம்பழத்தில் இயற்கை வகை சர்க்கரை இருப்பதால், காலையில் உணவில் இதனைச் சேர்த்துக் கொள்ளும் போது சில விஷயங்களில் கவனம் வேண்டும்.

நாம் அதிகப்படியான மாம்பழத்தைக் காலை உணவோடு சேர்த்து சாப்பிடக் கூடாது, சராசரியாக ஒரு கப், அதாவது 150 கிராம் மாம்பழத்தைச் சாப்பிடுவது சரியான முறை ஆகும். அதுபோல சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடும் அளவில் கவனம் கொள்ள வேண்டும்,

மாம்பழத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருப்பதால், ஒரு போதும் வெறும் வயிற்றில் இதனைச் சாப்பிடக் கூடாது, முழு மாம்பழத்தை எப்போதும், ஸ்னாக்ஸ் சாப்பிடும் நேரத்தில் தான் சாப்பிட வேண்டும்.

மேலும் மாம்பழத்தை மத்திய உணவிற்குப் பின் உடனே அதன் சுவைக்காகச் சாப்பிடக் கூடாது, ஏனென்றால் அரிசியில் கலோரி சத்துக்கள் அதிகம் இருப்பதால், அதனோடு மாம்பழத்தைச் சேர்த்து சாப்பிடக் கூடாது. இதனால் உடல் எடை மற்றும் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும், இருப்பினும் மாம்பழத்தைத் தேவையான அளவு காலை உணவில் சேர்த்து கொண்டு எப்படி ஊட்டத்துகளை பெறுவது என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.

முதலில் முழு மாம்பழத்தை சாப்பிடுவதை விடப் பாதி மாம்பழத்தை ப்ரோடின் நிறைந்த உணவுகளோடு சாப்பிடுவது நல்லது. எனவே பிஸ்தா பருப்பு, பாதாம் பருப்பு, சீஸ், யோகர்ட்  போன்ற விஷயங்களோடு சேர்த்து சாப்பிடலாம்,

நீங்கள் காலை உணவில் மாம்பழத்தைச் சேர்த்துச் சாப்பிட ஆசைப்பட்டால் carbohydrate உள்ள உணவுகளை கம்மியாக சாப்பிட வேண்டு, ஏனென்றால் பாதி மாம்பழத்தில் கூட 40 முதல் 50 கீரோம் carbohydrate சத்துகள் இருக்கிறது. எனவே 18 வகையான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட மாம்பழத்தை இந்த முறைப் படி காலையில் சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.