கர்ப்பக் காலத்தில் குழந்தையை சுமக்க தாயின் எலும்புகள் வலுவாக இருப்பது அவசியம். எலும்பு ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருப்பதில் கால்சியம் சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
கர்ப்பிணிகளின் தினசரி கால்சியம் தேவையை பூர்த்தி செய்ய கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
ஒமேகா 3 fatty acids நிறைந்துள்ள உலர்ந்த அத்திப்பழத்தை ஒரு கப் அளவு சாப்பிட்டால் 241 மில்லிகிராம் கால்சியம் உள்ளது.
15.36 மில்லிகிராம் அளவு கால்சியம் கொண்ட பேரீச்சை கர்ப்ப கால வலி, ரத்தம் குறைதல், முதுகு வலி போன்ற பல பிரச்சினைகளில் உதவும்.
இரும்புச்சத்து, Folic acid மற்றும் பொட்டாசியம் மிகுந்த உலர்ந்த apricot, தாய்க்கு தேவையான கால்சியத்தை தருவதோடு குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும் உதவும்.
கால்சியம் மற்றும் விட்டமின்கள் அதிக அளவில் உள்ள கிவி பழம் கர்ப்பக் கால ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்.
கால்சியம் சத்து குறைபாடு உள்ள கர்ப்பிணி பெண்கள் மல்பெர்ரி பழங்களை சாப்பிடுவது சிறந்த தீர்வாக இருக்கும் எனக் கூறும் உணவியல் நிபுணர்கள், ஊட்டச்சத்தான உணவுகளை சாப்பிடுவதுடன், முறையான தூக்கம் மற்றும் நிம்மதியான மனநிலையை தக்க வைப்பதே தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு அடித்தளமாக அமையும் என கருத்து தெரிவிக்கின்றனர்.