Tuesday, May 13, 2025

56 வயது நடிகருடன் காதலில் விழுந்த பூஜா ஹெக்டே! அதிர்ச்சியில் ரசிகர்கள்

தெலுங்கு மொழியில் அதிக படங்களை நடித்து, ‘பீஸ்ட்’ படத்தில் விஜயுடன் இணைந்து நடித்து கோலிவுட் ரசிகர்களின் மனதையும் கவர்ந்தவர் பூஜா ஹெக்டே.

அக்டோபர் மாதத்தில் காயம் காரணமாக ஓய்வு எடுத்து வந்த பூஜா தற்போது விறுவிறுப்பாக படங்களில் நடித்து வருகிறார்.

பாலிவுட் படங்களில் கவனம் செலுத்த தொடங்கி  இருக்கும் பூஜா, தற்போது ‘கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ என்ற படத்தில் முன்னணி பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சல்மான் கானுக்கும் பூஜா ஹெக்டேவிற்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் உண்மைத் தன்மை உறுதியாகவில்லை என்றாலும், சல்மான் கானும் பூஜா ஹெக்டேவும் அதிக நேரத்தை ஒன்றாக செலவிட்டு வருவதாக கூறப்படுகிறது.

56 வயதாகும் சல்மான் கான் சங்கீதா பிஜ்லானி, ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைப், லூலியா வண்டூர் போன்ற பலருடன் காதலில் விழுந்த வரலாறு இருந்தாலும், இதுவரை அவர் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news