Monday, December 23, 2024

6 ஆண்டுகளுக்கு பின் பேருந்து கட்டணம் உயர்வு

புதுச்சேரியில் ஆறு ஆண்டுகளுக்கு பின், பேருந்து டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பேருந்து டிக்கெட் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக போக்குவரத்து துறை கூடுதல் செயலர் சிவக்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்படி ஏசி வசதியில்லாத நகர பேருந்துகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய் முதல் 7 ரூபாய் ஆகவும், அதிகபட்ச கட்டணம் 13 ரூபாயில் இருந்து 17 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஏ.சி வசதியுடன் கூடிய பேருந்துகளில் அதிகபட்சமாக கட்டணம் 26 ரூபாயில் இருந்து 34 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி வசதியில்லாத டீலக்ஸ் பேருந்துகளுக்கு அதிகபட்சமாக 47 ரூபாயாகவும், ஏசி இல்லாத விரைவு பேருந்துகளுக்கு 25 ரூபாயாகவும் பேருந்து டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news