ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் தனது செல்போனில் IPL மேட்ச் பார்த்தபடி பேருந்தை இயக்கியுள்ளார்.
ஓட்டுநரின் இந்த செயலை பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதையடுத்து பேருந்து ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.