காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே, கொடுத்த கடனை திருப்பி கேட்டவரின் வீட்டை இளைஞர் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்திரமேரூர் அடுத்த கட்டியாம்பந்தல் மேட்டு தெருவை சேர்ந்தவர் வினோத்குமார். 32 வயதான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அஜித் என்பவருக்குமிடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முன்விரோதத்தில் இருந்த அஜித், தனது தங்கையுடன் சேர்ந்து வினோத்குமாரின் வீட்டை தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சம்பவத்தன்று வினோத்குமாரின் மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில், அவர் நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறார். சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்திருக்கும் போலீசார், தலைமறைவாக உள்ள அஜித் மற்றும் அவரின் தங்கையை வலைவீசி தேடி வருகின்றனர்.