Friday, May 9, 2025

சுருண்டு விழுந்து ‘துடிதுடித்த’ வீரர் இரக்கமின்றி ‘அரக்கத்தனமாக’ நடந்த பும்ரா

தொடர் தோல்விகளால் தத்தளித்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணி, தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. 9 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் பாயிண்ட் டேபிளில் 3வது இடத்திற்கு முன்னேறி, Play Off ரேஸிலும் கலந்து கொண்டுள்ளது.

அந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக ஆரம்ப போட்டிகளை மிஸ் செய்தார். தற்போது அவர் அணியில் இணைந்தாலும் கூட பந்துவீச்சில் பழைய தாக்கம் அவரிடம் இல்லை. இந்தநிலையில் தன்னுடைய பந்துவீச்சில் பவுண்டரிகள் அடிக்கும் வீரர்களை, பழிவாங்கி வம்பிழுக்கும் எண்ணம் பும்ராவிடம் தலை தூக்கியுள்ளது.

இது ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. போட்டியின் 13வது ஓவரை பும்ரா வீசினார். அப்போது ஸ்ட்ரைக்கில் நின்ற அபினவ் மனோகர் முதல் பந்தில் சிக்ஸர் விளாசினார். இதனால் கடுப்பான பும்ரா அடுத்த பந்தை Full Toss ஆக வீசினார்.

அபினவ் சுதாரிப்பதற்குள் பந்து அவரது வயிற்றில் பட்டுவிட்டது. இதில் நிலைகுலைந்த அவர் சட்டென சுருண்டு கீழே விழுந்து விட்டார். ஆனால் பும்ரா எதுவுமே நடக்காதது போல, இயல்பாக திரும்பி நடந்து சென்று விட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள், ” பந்து பேட்ஸ்மேன்களை தாக்கினால் பவுலர் சென்று அவரிடம் நலம் விசாரிப்பார்.

ஆனால் மனிதநேயமே இல்லாமல் பும்ரா இப்படி நடந்து கொண்டுள்ளார்?, தன்னுடைய பந்தில் சிக்ஸர்கள் அடிப்பதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை போல. பும்ரா நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டு வருகிறார்,”என்று, சமூக வலைதளங்களில் அவரைக் கழுவி ஊற்றி வருகின்றனர்.

முன்னதாக டெல்லி வீரர் கருண் நாயர் பும்ராவின் பந்துவீச்சில் பவுண்டரிகள் விளாசிய போது, அவரிடம் வலுக்கட்டாயமாக பும்ரா சண்டைக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news