பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.197 ரீச்சார்ஜ் திட்டத்தின் கால அவகாசம் குறைக்கப்பட்டது. முன்பு இந்த திட்டத்தின் கூடுதல் பயன்கள் 70 நாட்களுக்காக கிடைத்திருந்தது, ஆனால் தற்போது 54 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
2ஜிபி டேட்டா (Daily 2GB Data), வரம்பற்ற வாய்ஸ் காலிங் (Unlimited Voice Calling) மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் (100 SMS) ஆகியவைகளை வழங்கியது. ஆனால் தற்போது 4ஜிபி டேட்டா, 300 நிமிட வாய்ஸ் கால்கள் (300 Mins Voice Call) மற்றும் மொத்தம் 100 எஸ்எம்எஸ் உடன் வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 54 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த திடீர் நடவடிக்கை மலிவான விலையில் சிம் கார்டுகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் கவலைகளை எழுப்பியுள்ளது.