அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) தனது வாடிக்கையாளர்களுக்காக 1000க்கும் மேலான சேனல்களை ரூ.61க்குள் வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை எந்த டெலிகாம் நிறுவனம் இவ்வளவு குறைந்த கட்டணத்தில் இந்த அளவிலான சேவையை வழங்கவில்லை.
BSNL தனது புதிய டிஜிட்டல் டிவி மற்றும் OTT சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது iFTV அல்லது BiTV (Bharat Internet TV) என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சேவை மூலம், வாடிக்கையாளர்கள் 500-க்கும் மேற்பட்ட நேரடி சேனல்கள் மற்றும் 1000+ OTT சேனல்களையும் பெறலாம்.
Also Read : 5ஜி-யை மிஞ்சும் 6ஜி வேகம்! 2030-க்குள் வரப்போகும் புதிய தொழில்நுட்பம்
இந்தத் திட்டத்தில் இந்தி, ஆங்கிலம் மற்றும் பிற பிராந்திய மொழிகளின் சேனல்களும் அடங்கும். இது மட்டுமல்லாமல், Netflix, Amazon Prime, மற்றும் Disney+ Hotstar போன்ற பிரபலமான OTT தளங்களின் உள்ளடக்கத்தையும் நீங்கள் ரசிக்கலாம்.
இந்தச் சேவையைத் தொடங்க நீங்கள் 18004444 என்ற வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்புகொள்ள வேண்டும். அந்த எண்ணுக்கு ஒரு Hi என்று மெசேஜ் அனுப்பிய பிறகு, வரும் மெனுவில் இருந்து “Activate IFTV” என்பதைத் தேர்ந்தெடுத்து இந்தச் சேவையைத் தொடங்கலாம்.