இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனம் BSNL டெல்லி மற்றும் மும்பையில் 5G சேவைகளை 2025 டிசம்பர் மாதத்திற்கு முன்னால் துவக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொலைத்தொடர்பு துறை (DoT) ஒரு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது : “எல்லா சாதனங்களும் பிழையின்றி சரியான முறையில் செயல்படுகின்றன, ஆகையால் 2025 டிசம்பர் மாதம் BSNL டெல்லி மற்றும் மும்பையில் 5G சேவைகள் துவங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என கூறியுள்ளார்.
இதற்குமுன்பு, ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே நாட்டின் முழுவதும் 5G சேவைகளை துவங்கி, பெரும் மக்கள் தொகையை கொண்டுள்ளன.