அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, சுதந்திர தினத்தை முன்னிட்டு குறைந்த விலையில் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. வெறும் 1 ரூபாய்க்கு,அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 2GB அதிவேக டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச SMS சேவை வழங்குகிறது. இது 28 நாட்கள் செல்லுபடியாகும்.
ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை வாடிக்கையாளர்கள் புதிய பிஎஸ்என்எல் சிம் வாங்கினால், வெறும் 1 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் 30 நாட்களுக்கு இந்த சலுகைகளைப் பெறுவார்கள் என்று கூறியுள்ளது. இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும். எந்தவொரு பிஎஸ்என்எல் மையத்திலிருந்தும் 1 ரூபாய்க்கு புதிய சிம் கார்டை வாங்குவதன் மூலம் வாடிக்கையாளர்கள் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறலாம்.