Monday, February 23, 2026

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அண்ணன் – தம்பி சுட்டுக்கொலை., பீகாரில் அதிர்ச்சி சம்பவம்

பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னா அருகே உள்ள ஷாபூர் கிராமத்தை சேர்ந்த மனிஷ் குமார் (27) மற்றும் மஞ்சீத் குமார் (25) ஆகிய அண்ணன்-தம்பிகள், தங்கள் உறவினர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அந்த நேரத்தில், அடையாளம் தெரியாத சிலர் திடீரென விழா நடைபெற்ற இடத்துக்குள் நுழைந்து, இருவரையும் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக இருவரையும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இருவரின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சொத்து தொடர்பான முன்விரோதம் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தப்பியோடிய குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

Latest News