மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள ஐஷ்பாக் ஸ்டேடியம் அருகே கட்டப்பட்டு வரும் ஒரு ரயில்வே மேம்பாலம் தற்போது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்த மேம்பாலம் ரூ.18 கோடியிலான செலவில் கட்டப்பட்டுள்ளது. 648 மீட்டர் நீளமும், 8.5 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த மேம்பாலம் திரும்புவதற்கு 45 டிகிரி வளைவாக இல்லாமல் 90 டிகிரி வளைவில் திரும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மேம்பாலம் குறித்து காங்கிரஸ் கட்சி தனது சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்துள்ளது. இதையடுத்து மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ராகேஷ் சிங் இந்த பிரச்சினையை குறித்து ஆராய்வதாக உறுதியளித்தார்.