தாலிகட்டும் மணமகன் மடியில் மயங்கி விழுந்து உயிரிழந்த மணமகள்

64
Advertisement

ஆந்திரா மாநிலம் , விசாகப்பட்டினத்தில் திருமண மண்டப ஒன்றில்  சிவாஜி என்பவருக்கும் ஸ்ருஜனா என்ற பெண்ணிற்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது.

கடந்த மூன்று நாட்களாக திருமணத்திற்கான வேலைகளை வெகு சிறப்பாக இரு வீட்டாரும் செய்துவந்தனர். இந்நிலையில் நேற்று தாலி கட்டும் நேரத்திற்கு முன்பாக, மணப்பெண்ணுக்கு வாழ்த்து கூறும் சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், திடீரென ஸ்ருஜனா, மணமகன் சிவாஜியின் மடியிலேயே மயங்கி  விழுந்துள்ளார்.

Advertisement

இதனையடுத்து, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு மணமகள்  அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் மணமகள் ஏற்கனவே  இறந்துவிட்டதாக  கூறியுள்ளனர்.இதை அறிந்த  உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

திருமணத்தில் மணப்பெண் உயிரிழந்த நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில் ஸ்ருஜனா விஷம் அருந்தியதன் காரணமாகவே உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Image

பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், மணமகளின் தந்தை அளித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது.

சில தினங்களுக்கு முன்னதாக மணமகள் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  மீண்டும் வீடு திரும்பியதாக சொல்லப்படுகிறது.திருமணத்தில் மணமகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.