மார்பக புற்றுநோய் சிகிச்சையில் மிரள வைக்கும் முன்னேற்றம்

250
Advertisement

இங்கிலாந்தில் வசிக்கும் ஜாஸ்மின் டேவிட், இந்திய வம்சாவழியை சேர்ந்தவர்.

2017ஆம் ஆண்டில் இவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் கீமோதெரபி, surgery போன்ற சிகிச்சைகளுக்கு பிறகு 2018ஆம் ஆண்டு, புற்றுநோய் குணமானது.

எனினும், 2019ஆம் ஆண்டு திரும்பவும் கேன்சர் அறிகுறிகள் தீவிரமாக வர துவங்கியதும் செய்வதறியாது திகைத்தார் ஜாஸ்மின்.

அப்போது தான் அவர், இங்கிலாந்து அரசு மருத்துவமனை நடத்தும் மார்பக புற்றுநோய்க்கான மருந்தின் சோதனை ஓட்டத்தில், தன்னை தன்னார்வலராக ஈடுபடுத்தி கொள்ள முன்வந்தார்.

அடிசோலிசுமாப் (Atezolizumab) என்ற immunotherapy வகை மருந்தை முதலில் எடுத்து கொள்ளும் போது, தலைவலி, உடல் வெப்பம் என கடும் பக்க விளைவுகள் இருந்ததாக கூறும் ஜாஸ்மின், சில வாரங்களிலேயே நல்ல முன்னேற்றத்தை காண முடிந்ததாக தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டிலேயே கேன்சர் முழுமையாக குணமாகி விட்ட நிலையில், 2023 வரை தொடர் சிகிச்சை எடுத்து கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

எல்லா சிகிச்சைகளும் கைவிட்ட நிலையில், மருத்துவ ஆய்வுக்காவது பயன்படலாம் என நினைத்து தான் இந்த மருந்தை எடுத்துக்கொண்டதாகவும், தற்போது புதிதாக பிறந்து இருப்பதை போன்று உணர்வதாகவும் ஜாஸ்மின் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.