டிஸ்யூம்… டிஸ்யூம் செய்து கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக்கொண்ட அரசியல்வாதிகள்

254
Advertisement

கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்ள குத்துச்சண்டை போட்ட அரசியல்வாதிகளின் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரேசில் நாட்டின் போர்பா நகரத்தின் மேயராக இருந்தவர் சிமாவோ பெய்க்ஸோடா. முன்னாள் கவுன்சிலர் எரினு அல்வாஸ் டா சில்வா. இவர்களிருவரும் டிசம்பர் 11 ஆம் தேதியன்று 3 சுற்று குத்துச்சண்டை போட்டியிட்டு தங்களின் கருத்து வேறுபாடுகளைக் களைந்துகொண்டனர்.

மேயராக இருந்த சிமாவோ, போர்பா நகரை நன்றாகப் பராமரிக்கவில்லை என்றுகூறி வீடியோ ஒன்றை வெளியிட்டதுடன், தன்னுடன் குத்துச்சண்டை போடத் தயாரா என்று கவுன்சிலராக இருந்த எரினு அல்வாஸ் தனது பேஸ்புக்கில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவரது கருத்துக்குப் பதிலளித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட முன்னாள் மேயர், அந்த சவாலை ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், இரண்டு அரசியல்வாதிகளும் நடுவர் முன்னிலையில் குத்துச்சண்டையில் ஈடுபட்டனர்.

தங்கள் கருத்து வேறுபாடுகளைக் களைய இருவரும் ஆவேசமாகத் தாக்கத் தொடங்கினர். அவர்களின் நிஜமான சண்டையினைப் பொதுமக்கள் வேடிக்கையாகக் கண்டுகளித்தனர். இரவில் தொடங்கிய குத்துச்சண்டை அதிகாலை 3 மணிவரை நீடித்தது.

3 சுற்று போட்டியின் முடிவில் மேயராக இருந்த சிமாவோ வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் போட்டியின் மூலம் தனது எதிரியை ஒழித்துவிட்டதாகவும், போர்பா நகரத்தில் குத்துச்சண்டை போட்டியை ஊக்குவித்துள்ளதாகவும் கூறியுள்ளார் மேயராக இருந்த சிமாவோ பெய்க்ஸோடா.

கேட்கவே இன்ட்ரஸ்ட்டா இருக்குல்ல…நம்ம நாட்லயும் இப்படி வந்தால் எப்படியிருக்கும்?