Thursday, July 31, 2025

ரீல்ஸ் வீடியோவுக்கு காதலன் எதிர்ப்பு : காதலி எடுத்த தவறான முடிவு

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் ஒசஹள்ளி பகுதியைச் சேர்ந்த சவுபாக்யாவின் மகள் சைதன்யா (22), தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். சைதன்யாவுக்கும் ராமேனஹள்ளியைச் சேர்ந்த விஜய் (25) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளாக காதல் தொடர்பு இருந்தது.

சமீபத்தில் சைதன்யா, புகைப்படக் கலைஞர் ஒருவரிடம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, அதை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இதை பார்த்த விஜய், சைதன்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் சைதன்யாவின் தாய் அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சைதன்யா, தனது அறையில் கதவை பூட்டி, தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, சைதன்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

‘ரீல்ஸ்’ வீடியோ விவகாரத்தில் காதலனுடன் ஏற்பட்ட தகராறே தற்கொலைக்கு காரணம் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News