Saturday, May 17, 2025

வளர்ப்பு நாயை காப்பாற்ற சென்ற சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம்

பரமக்குடி அருகே அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த வளர்ப்பு நாயை காப்பாற்ற சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பாப்பார் கூட்டம் கிராமத்தில் வசிக்கும் தர்மர் மகன் கௌஷிக் என்பவர் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இவர், நண்பர்களுடன் வயல்வெளி பகுதியில் விளையாட சென்ற பொழுது, கௌஷிக் வளர்க்கும் வளர்ப்பு நாய் அறுந்து கிடந்துள்ள மின் வயரை மிதித்து மின்சாரம் தாக்கி துடிதுடித்து கிடந்தது.

இதனை பார்த்த சிறுவன் நாயைக் காப்பாற்ற சென்ற போது மின் வயரில் சிக்கி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news