தேனியில் அரசு பள்ளியில் புத்தகங்கள் திருடப்பட்ட சம்பவத்தில் ஆசிரியர் உள்பட 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டியில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, இரவு நேரத்தில் இந்த பள்ளிக்கு வந்த மர்மநபர்கள், அங்கிருந்த புத்தகங்களை வேனில் திருடி சென்றனர்.
இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் உள்பட 2 பேர் தற்காலிகமாக வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில் உயர்மட்ட அளவில் விசாரணை நடத்தி இதில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.