Saturday, December 6, 2025

நடுங்கும் டெல்லி., இதுவரை நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள்

டெல்லி அரசியல், நிர்வாகம் மற்றும் பண்பாட்டு மையமாக மட்டுமல்லாமல், பலவிதமான தாக்குதல்களுக்கும் ஏற்படும் நகரமாக உள்ளது. இங்கு கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

1996 மே 25 ஆம் தேதி டெல்லி லாஜ்பத் சென்ட்ரல் மார்க்கெட்டில் நடந்த குண்டுவெடிப்பில் 16 நபர்கள் உயிரிழந்தனர்.

1997 அக்டோபர் 1-ம் தேதி சதார் பஜார் பகுதியில் இரட்டை குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 30 பேர் பாதிக்கப்பட்டனர்.

அக்டோபர் 18: ராணிபாக் மார்க்கெட்டில் இரட்டை குண்டுகள் – 1 உயிரிழப்பு, 23 பேர் காயம்

அக்டோபர் 26: கரோல் பாக் பகுதியில் மீண்டும் இரட்டை குண்டுவெடிப்பு – 1 உயிரிழப்பு, 34 பேர் காயம்

நவம்பர் 30: செங்கோட்டை அருகே இரட்டை வெடிப்பு – 3 உயிரிழப்புகள், 70 பேர் காயம்

டிசம்பர் 30: பஞ்சாபி பாக் பேருந்துக்குள் வெடிப்பு – 4 உயிரிழப்புகள், 30 பேர் காயம்

2000-ஆம் ஆண்டு செங்கோட்டை பகுதியில் பல வெடிப்புகள் நடந்தாலும் 2 பேர் உயிரிழந்தனர். ஆனால் 2001 டிசம்பர் 13-ஆம் நாள் நடைபெற்ற நாடாளுமன்றத் தாக்குதல் இந்திய வரலாற்றில் பெரிய அதிர்ச்சியாக பதிவு செய்யப்பட்டது. பயங்கரவாதிகள் நாடாளுமன்ற வளாகத்தில் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் வீரத்துடன் எதிர்கொண்டும் 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்திய பாதுகாப்பு கொள்கையில் புதிய மாற்றத்தை உருவாக்கியது.

2005-ம் ஆண்டு தீவிரவாத தாக்குதல் அதிகரிப்பு

மே 22-ம் தேதி லிபர்ட்டி மற்றும் சத்யம் சினிமா வளாகங்களில் குண்டுவெடிப்பு; 1 உயிரிழப்பு, 60 பேர் காயம்.

அக்டோபர் 29-ம் தேதி சரோஜினி நகர், பஹர்கன்ச், கோவிந்த்புரி ஆகிய இடங்களில் மூன்று வெடிப்புகள் நடந்தன. 60 பேர் உயிரிழந்து, 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தீபாவளி பண்டிகை நேரத்தில் நடந்ததால் பொதுமக்களின் மனதில் பெரும் அதிர்ச்சியும், அரசாங்கத்தின் பாதுகாப்புத் திறனில் கவலைவும் ஏற்பட்டது.

2006 முதல் 2011 வரை தாக்குதல் நிலவரம்

2006-ம் ஆண்டு சிறிய வெடிப்புகள் நடந்தாலும் குற்றவாளிகள் கண்டறியப்பட்டனர். இந்த காலகட்டம் உளவுத்துறையின் நவீனமயமாக்கலில் முக்கியம்.

2008 செப்டம்பர் 13-ம் தேதி ஒரே நாளில் 5 இடங்களில் குண்டுவெடிப்புகள் – 30 உயிரிழப்புகள், 90 பேர் காயம்.

27-ம் தேதி மெராலி மலர் சந்தையில் வெடிப்பு – 3 உயிரிழப்புகள், 23 காயங்கள். இந்த சம்பவங்களுக்கு இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு பொறுப்பு வாங்கியது.

2011 செப்டம்பர் 7-ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் முன்பும் குண்டுவெடிப்பு நடந்தது.

தற்போதைய நிலை : டெல்லியில் 13 ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டை அருகே மீண்டும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News