சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் அந்த நபரிடம் விசாரித்த போது அந்த நபர் முன்பதிவில்லா டிக்கெட் வாங்கிக்கொண்டு தூங்குவதற்காக முன்பதிவு பெட்டிக்கு சென்றுள்ளார். அங்குள்ள பயணிகள் தன்னை தூங்க விடாமல் தொந்தரவு செய்ததால் எரிச்சல் அடைந்து ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக போலிசுக்கு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த நபர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.