ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், 10 பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள் குழு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
நான்கு தளங்களுடன் இயங்கி வரும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, ஆட்சியரின் மின்னஞ்சல் முகவரி மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
உடனடியாக வெடி குண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், 10 பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள் குழு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீவிர சோதனை நடத்தினர். இதனால் ஆட்சியர் அலுவலகம் பெரும் பரபரப்புக்கு உள்ளானது.
