Sunday, February 1, 2026

டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் இருந்து இன்று காலை சென்னைக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 100க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தில் தீவிர சோதனை நடத்தினர். இதில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News