டெல்லியில் உள்ள தமிழ்நாடு பொதிகை அரசு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மிரட்டலையடுத்து தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வந்தனர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.