சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்திய போது அது வதந்தி என்பது தெரிய வந்தது.
சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் அதுவும் வதந்தி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.