கடலூர் அருகே சிப்காட் சாயப்பட்டறை தொழிற்சாலையில் பாய்லர் டேங்க் வெடித்து சிதறி பயங்கர விபத்து ஏற்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள லாயல் எனும் சாயப்பட்டறை தொழிற்சாலையில் இன்று அதிகாலை பாய்லர் டேங்க் வெடித்து சிதறியது.
6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் வெடித்ததில், சுற்றியுள்ள வீடுகளுக்குள் ரசாயன கழிவுநீர் புகுந்தது. 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் ரசாயன கழிவுநீர் புகுந்ததால், பாதிக்கப்பட்டவர்கள் ஆத்திரமடைந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.