தென்காசி மாவட்டம் புளியரை அருகே தெற்குமேடு பகுதியை சேர்ந்தவர் குமார் (50). ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் தற்போது தற்போது பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார்.
இந்நிலையில் நேற்று புளியரை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாத்ரூமில் குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண், புளியரை போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி புளியரை பகுதியில் பதுங்கி இருந்த குமாரை கைது செய்தனர்.