அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்கும் பேரணி சென்ற பாஜக நிர்வாகி, பாஜக மாநில மகளிரணி தலைவர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிம்மக்கல் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஆடுகள் அடைக்கப்பட்ட பகுதியின் அருகே பாஜக மகளிரணியினரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
200க்கும் மேற்பட்ட ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன நிலையில் தொடர்ந்து ஆடுகள் சத்தமிட்டு வருவதோடு ஆடுகளின் கழிவுகள் துர்நாற்றம் வீசுவதால் பாஜக நிர்வாகிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.